தமிழ் மக்களை அடிமையாக நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் தீர்வு விடயத்தை வைத்து கொண்டு தமிழ் மக்களை அடிமை அரசியலில் ஈடுபடுத்துவதாக தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழர் ஐக்கிய முன்னணியின் கொழும்பு மாவட்ட கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.